Donnerstag, 19. März 2009

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர் சீர்காழியில் அந்தணர் மரபு சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகபிப் பிறந்தார்.

3-ம் ஆண்டில் உமையம்மையாரின் ஞனப்பால் உண்டு, திருப்பதி தோறும் சென்று பதிகம் பாடி, சைவ எழுச்சியூட்டி, திரமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுள் சென்று இறைவனுடன் கலந்தார்.

இவர் அப்பரின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். திருநீல கண்ட யாழ்ப்பாணர் இவரோடு சென்று இவருடை பால்களை எல்லாம் யாழ் இசைத்தார். ஒரு முறையாவது யாழாலும் இசைக்கக முடியாத பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினார். இதை உணர்ந்த திரு நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை முறிக்க முயன்ற போது இதைக் கண்ட சம்பந்தர் அதைத் தடுத்து யாழ்ப்பாணருக்கு தேறுதல் மொழி கூறினாராம்.

அன்றில் இருந்து இதை யாழ்முறிப்பண் என்பார்களாம். ஆனால் இப்போ இதைத்தான் சிலர் "நீலாம்பரி" என்பர், சிலர் இதை "அடாணா" என்பார் என்று வரலாற்றில் செல்லப்படுகின்றது.

சம்பந்தர் 16.000 பாடல்களைப் பாடினாராம், ஆனால் 384 பதிகங்களுக்குள் அடங்கிய 4181 பாடல்களே இன்று மக்களிடம் உள்னவாம்.

இவை இனிய ஓசைகளுடன் கூடிய இசைப்பாக்கள் ஆகும். யமகம். திரிபு, மொழிமாற்று, அடிமாற்று எனச் சொல்லணிகள் இப்பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும், திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பலவகை. இயற்கை வருணைனைப பாக்கள் சில வகை. எல்லாப் பாக்களும் இனிய, எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ளன.

சோழ நாட்டில் சைவசமையத்தை உறுதி பெறச்செய்து பாண்டிய நாட்டை சமணர் படியில் இருந்து மீட்ட பெருமையும் சப்பந்தரை சேரும்.

பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை அடங்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும் தாழ்ந்ததையும் கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். பதிய இறுதியில் தன் பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் புகுத்தியுள்ளார்.

தமிழகமெங்கும் செந்தமிழோசையை முழங்கச்செய்து சைவ சமயத்தோடு தமிழ் வளமும் மிளிரச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

அன்புடன்
கவிதைக்குயில் ராகினி
ஜெர்மனி.

இறைவணை பக்தியோடு வழிபடுக.

இறைவணை பக்தியோடு வழிபடுக.

கடவுள் பக்தி இருந்தாலே எல்லாம் நன்மையுடையவையாக இருக்கும். பக்தி என்பது வெறும் வாய்ச் சொல்லில் அமைந்து விடக்கூடாது. மனதை ஒரு நிலைப் படுத்தி அவன் முன் நாம் முழுமையாகச் சரணடைதல் வேண்டும். மனதை மறபக்கம் அலை மோத விட்டு இரு கை மட்டும் இறைவணை வணங்குவது போல் அவன் முன் நின்று விட்டு கடுவுளை வணங்கிணோம், இவன் கைவிட்டுவிட்டான் என்று புலம்பி அவனைக் குறை சொல்லி, கோவிலுக்குப் போகாமல் நம்பிக்கை இழந்து வாழும் மக்கள் தான் இப்போ அதிகம் இவ்வுலகில்.

செய்வனை திருந்தச்செய்.

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.

இறைன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து (உள்பொருள்) ஆகவும், சித்து (அறிவுடைய பொருள்) ஆகவும், ஆனந்தம் (இன்பமயமான பொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.

இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.

கடவுளைப் பல வடிவங்களில் வழிபடுகின்றோம். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு தெய்வத்தை நிலை நிறுத்தி குலதொய்வமாக நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். ஒவ்வொரு வடிவத்திலும் இறைவன் எமக்கு அருள் புரிகின்றான். முருகன், சிவன், கணபதி, வைரவர், ஆஞ்சனேயர், பிரம்மா, இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி, விஷ்ணு என்ற பல வடிவங்களிள் எமக்கு அருள் புரிகின்றான் இறைவன்.

அன்பே சிவம் என்பது போல் அன்போடு அவனை மனதில் நிலை நிறுத்தி எப்பொழுதும் வழிபடவேண்டும் நாம்.

எத்தனை படையல்கள் நாம் படைத்தாலும் அவனை உள்ளன்போடு வழி படுதல் தான் அவனைச் சென்றடைகின்றது. இறைவனின் மனதும் குளிர்மையடைகின்றது.

ஒவ்வொருவருக்கும் நாம் அன்பைச் செலுத்தி, நல் வார்த்தை பேசி, நல்ல சிந்தனைகள் செய்தாலே இது இறைவன் பாதம் சென்றடையும்.

நமது சமையத்தின் வரலாறே இறைவனால் படைக்கப்ட்ட உயிர்கள் அனைத்தும் இறைவணை அடைதலாகும். அதலால் அவன் மீது பக்தி செலுத்தி, காலை, மாலை, மதியம் அவணை நினைத்து பூஜித்து, அவன் அருளைப் பெற வேண்டும். நாம் எங்கு இருந்தாலும் அவன் அருள் நம்மைச் சுற்றியே இருக்கும். முக்கியமாக, புலம் பெயர் நாட்டில் சில மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் வீட்டில் ஏதோ கடமைக்கு ஒரு இவைன் படம் தொங்க விடப்பட்டிருக்கும் தாங்கள் இல்லத்திலும் இருக்கின்றான் இறைவன் என்று. இறைவணை முதலில் எங்கு வைத்து வழிபட வேண்டும்? ஓழுங்கான இடத்தில் வைத்து அவணை வழி பட வேண்டும். இறைவனுக்கு என்று ஒரு சிம்மாசனம் அமைத்து, எந்த ஒரு தீட்டு துடக்கும் அணுகாத படி அவனை வைத்து வழி படுதலே சிறந்ததாகும்.

பா.ராகினி


சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்

சிவம் வேறு; அறிவு வேறு அன்று. அறிவே மெய்ப்பொருள். மற்ற எல்லாம் பொய்ப் பொருள்கள்தான். பொய் என்பதற்கு நிலையில்லாதது என்பது பொருள். நிலையாக இருப்பவர் கடவுள் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் தோன்றி நின்று மொத்தமாக மாய்ந்து விடுபவர்கள்.

சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. இது மாசி மாதம். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது. அதிகாலையில் நீராடி திருநீறும். ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து. திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி. சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி. மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து. வலம் வந்து. அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள். நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பியஅன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி. சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதம் இருந்தவர்களின் சலக வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து. சாம்பலாகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி. விநாயகரை ஒரு முறையும். சிவபெருமானை மூன்றுமுறையும். அம்பிகையை நான்கு முறையும் வலம்வர வேண்டும். வழிபடும்போது மனம் இறைவன்மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப்பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.

கோயிலில் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு தூண்களில் துடைப்பது தவறாகும். வழிபாடு முடிந்தபிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோயிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

இன்சொல் பேசுகின்றவர்களுக்கு உலகில் ஒருவகையான துன்பமும் இல்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி கண்டிப்பாக கிடைக்கும்.

மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல்பேசி இம்மை இன்பத்தை அடைந்து நற்கதி பெறுவோம்.

உற்றாரும் மற்றாரும். கற்றாரை கைகூப்பி வணங்குவர். கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; கல்லாதவனை அவனது மனைவிகூட கேலிசெய்வாள்.

மனிதனை உயர்த்துவது பணமோ. பதவியோ. குலமோ. பருமனோ. உயரமோ அல்ல. அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்தும்.

வீட்டுத் தலைவர் ஒரு பாடலைப் பாட. மற்றவர்கள் அதை தொடர்ந்து பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன். அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும். லட்சுமியின் அனுக்ரஹமும் உண்டாகும்.

எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும். எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். எனவே உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான கடவுள் வழிபாடாகும்.