Freitag, 29. Februar 2008

கதிர்காமம்





கதிர்காமம்



பக்திப்பரவசம் கொண்ட கதிர்காமம் மனதை விட்டு நீங்காத கோவில்.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் பக்தியோடு அந்த முரகணை வழி பட்டு நிம்மதி அடைவார்கள்
அவன் புகழை பாடி அவன் இடத்தில் அமர்ந்தலே நாம் தோசங்கள் யாவும் நீங்கி உடல் நோய் மாறி மக்களை நிம்மதி அடையச்செய்யும் சக்தி கொண்ட கதிர்காமககந்தன் அவன் ஆருளை வேண்டிட மக்கள் அலை போதும் திருத்தளம் கதிர்காமம்.
கதிர்காமம் ஊவா மாகாணத்தில் புத்தளப்பிரிவில் உள்ள தியகம என்னும் வனாந்திரப் பிரதேசத்தில் மாணிக்க கங்கைக அருகாமையில் அமைந்துள்ளது
கதிர்காமத்தை சுற்றி பல கோவில்கள் உள்ளன இதில் கதிர்காம சந்நதி . வள்ளியம்மை சந்நதி என்றடி கோவில் உள்ளது.
உவ்வொரு நோய்களை தீர்த்துவைக்கும் பக்தியான முரகனிடம் வேண்டுதல் செய்து காவடி கற்புரச்சட்டி பாத யாத்திரை என்று நேத்திக்கடங்களை முடித்துவைப்பதற்கே அங்கு பக்தர் கூட்டம் உவ்வொரு நாளும் காணலாம் ஒவ்வொரு வருமஇ அவனை அழைத்து கூப்பட்டு வேண்டும் போது நமக்குள் முரகனையே காணக் கூடியதாக இருக்கும் அவனை நம்பினால் அவன் அருள் நமக்கு என்றும் உண்டு.

Dienstag, 26. Februar 2008

சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்

சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்

சிவம் வேறு; அறிவு வேறு அன்று. அறிவே மெய்ப்பொருள். மற்ற எல்லாம் பொய்ப் பொருள்கள்தான்.

பொய் என்பதற்கு நிலையில்லாதது என்பது பொருள்.
நிலையாக இருப்பவர் கடவுள் மட்டுமே.
மற்றவர்கள் எல்லாம் தோன்றி நின்று மொத்தமாக மாய்ந்து விடுபவர்கள்.
சிவ விரதங்கள் எட்டு அவற்றுள் சிவராத்திரி ஒன்று இது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது.

அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து.
திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும்.
பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
மாலையில் மீண்டும் நீராடி.
சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி. மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள்.
நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு தரிசிக்க வேண்டும்.
நிரம்பியஅன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.
மறுநாள் காலை நீராடி
சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இப்படி விரதம் இருந்தவர்களின் சலக வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பலாகும்.
தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர் அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.


கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும் கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்றுமுறையும் அம்பிகையை நான்கு முறையும் வலம்வர வேண்டும்.

வழிபடும்போது மனம் இறைவன்மீது மட்டுமே இருக்க வேண்டும் விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப்பெறவேண்டும்.
அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும் சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.

கோயிலில் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு தூண்களில் துடைப்பது தவறாகும் வழிபாடு முடிந்தபிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும்.
கோயிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இன்சொல் பேசுகின்றவர்களுக்கு உலகில் ஒருவகையான துன்பமும் இல்லை. எம வாதனையும் கிடையாது.

சிவகதி கண்டிப்பாக கிடைக்கும்.
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல்பேசி இம்மை இன்பத்தை அடைந்து நற்கதி பெறுவோம்.
உற்றாரும் மற்றாரும் கற்றாரை கைகூப்பி வணங்குவர். கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; கல்லாதவனை அவனது மனைவிகூட கேலிசெய்வாள்.


மனிதனை உயர்த்துவது பணமோ. பதவியோ. குலமோ. பருமனோ. உயரமோ அல்ல. அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்தும்.
வீட்டுத் தலைவர் ஒரு பாடலைப் பாட. மற்றவர்கள் அதை தொடர்ந்து பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன். அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும். லட்சுமியின் அனுக்ரஹமும் உண்டாகும்.
எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும். எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். எனவே உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான கடவுள் வழிபாடாகும்.

விளக்கை போலவே மனித வாழ்க்கை

விளக்கை போலவே மனித வாழ்க்கை

நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது. அதுபோலவே வேதனையையும் அதிகப் படுத்த முடியாது.

இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப-துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒன்று போலவே இருக்கும்.நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்திற்கும்.

அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கத்திற்கும் அதை தள்ளுவதுதான்
ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால் அப்படியே இருப்பது அதன் இயல்பு.

ஏற்றமும். இறக்கமும் எழுச்சியும் வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது. சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது வாழ்வென்றால் அதில் மரணமும் அடங் கியிருக்கிறது
அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

விளக்கு எரியும் போது அழிந்து கொண்டே இருக்கிறது.
அதுதான் அதனுடைய வாழ்க்கை.

அதுபோல்தான் மனித வாழ்க்கையும்.
வெவ்வேறு கோணங்களில் பார்க் கப்பட்ட ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங் களே வாழ்வும். சாவும்..ஒரே அணையின் வீழ்ச்சியும். எழுச்சியுமே அவை. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையா கின்றன. ஒருவன் ஹவீழ்கின்ற' பக்கத்தை பார்த்து விட்டு துன்ப நோக்குடையவனாகிறான். மற்றொரு வன் எழுகின்ற பக்கத்தை பார்த்துவிட்டு இன்ப நோக்குடையவனாகிறான்.

-விவேகானந்தர்.
கடவுள் தரிசனம்!

ஆலய கர்ப்பக கிரகம் இருட்டாக அமைந்திருக்கக் காரணம் என்ன தெரியுமா?இதயத்தில் பரமாத்மா உறைகிறது என்பது ரிஷிகள் கண்ட உண்மை. எனவே உள்ளம் என்ற கடலில் ஆழ்ந்து ஆழ்ந்து சென்றதால்தான் அடியில் உள்ள முத்துப் போன்ற கடவுள் தரிசனம் கிடைக்கும்.கர்ப்பக் கிரகம் இதயஸ்தானம். இதயம் குகை போன்றது. இருள் உள்ளது. எனவே கர்ப்பக் கிரகமும் குகைகோல் அடைக்கப் படுகிறது.