Montag, 9. April 2007

விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.



http://rahini.blogspot.com/


விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.



முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.

இந்த பூஜை செய்வதால் என்னென்ன பலன்கள்...?எல்லா நலன்களும் நிறைந்த பரிபூரண வாழ்க்கை கிடைக்கும்.

தொழில் மேன்மை, நிறைந்த செல்வம், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இந்த பூஜையை யார் செய்யலாம்...?ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்தே செய்யக் கூடிய பூஜை இது.பூஜை எப்போது செய்ய வேண்டும்?

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்.

பூஜை செய்யும் முறைகாலையிலிருந்து எதுவும் சாப்பிடாமலிருந்து பூஜை முடிந்தபின் சாப்பிடவேண்டும்.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும்.

இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும்.இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது தெரியுமா? வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது.

உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம்.கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம்.

பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அடுத்தநாள் காலையில் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, அன்று மாலையில் குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்!


ராகினி

ஜேர்மனி.

Keine Kommentare: