Montag, 9. April 2007

போகமுனிவர்

பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர் சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.
அக்காலத்தில் சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில் மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளை தயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்து சேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால் உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்ட போகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரது உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம் தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம் என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்
ஒரு முறை தன் தாய்க்கு தான் யார் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார் போகர். "தெய்வப்பிறவியான நான் இந்த உலக மக்களின் நன்மைக்காக வந்து பிறந்துள்ளேன்' என கூறியிருக்கிறார். சிங்கங்களைக்கூட இனிய குணம் கொண்டவைகளாக போகர் மாற்றியிருக்கிறார். ஒருமுறை காட்டில் தவம் செய்துகொண்டிருந்த அவர் அருகில் குட்டி சிங்கம் தனது நாக்கால் அவரது வாயை தடவிக்கொண்டிருந்தது.
அப்போது போகரின் கண்ணிலிருந்து கண்ணீர் துளி தெறித்து குட்டியின் வாயில் பட அந்த நிமிடமே அந்த சிங்கக்குட்டிக்கு பெரும் ஞானம் ஏற்பட்டது. உயிர்களை கொன்று வாழ்வது தவறு என்பதை புரிந்துகொண்டது.
இதையடுத்து எல்லா சிங்கங்களும் ஒன்று சேர்ந்து தங்களால் அசுத்தப்படுத்தப்பட்ட அந்த இடத்தை சுத்தப்படுத்தின. கண் விழித்த முனிவர் சிங்கங்களிடம் தனக்கு நன்மை செய்த அந்த சிங்கங்கள் "ராஜமிருகம்' என அழைக்கப்படும் என்றார். அதனால்தான் சிங்கங்களை "சிங்கராஜா' என்கிறார்கள்.
போகர் பழநிமலையில் இருந்ததால் தண்டபாணி தெய்வம் அவருக்கு காட்சியளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.தன்னை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதைக்கூட முருகப்பெருமானே போகரிடம் சொல்லியிருந்தார்.
அதன்படியே முருகனுக்கு சிலை செய்தார் போகர். போகரின் முக்கிய சீடராக இருந்த புலிப்பாணியும் ஒரு சித்தர்தான்.
ஒருமுறை அந்தணர்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்ற போகரை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். உடனே போகர் அந்த வழியாக சென்ற ஒரு பூனையின் காதில் ஏதோ சொன்னார். அந்த பூனை நான்கு வேதங்களையும் வரிசைப்படுத்தி அழகாகச் சொன்னது. இதைக்கண்டு அந் தணர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பூனையையே வேதம் ஓதவைத்த இவர் மகானாகத்தான் இருக்க வேண்டும் என கருதி மன்னிப்புகேட்டனர்.
அதன்பின் தங்கள் வறுமை நீங்க ஏதாவது வழி செய்ய வேண்டுமென போகரிடம் கேட்டார்.
போகர் அந்த அந்தணர்களின் வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் ஒரு இடத்தில் குவிக்கச்செய்து அதன் மீது விராட்டியை அடுக்கி தீ பற்ற வைத்தார்.
அந்த பாத்திரங்கள் அனைத்தும் தங்கமாக மாறிவிட்டன. அந்தணர்கள் வறுமை நீங்கப்பெற்றனர்.இப்படி பல அற்புதங்களை செய்தவர் போக முனிவர்.
-------
ராகினி
ஜேர்மனி.

1 Kommentar:

Unknown hat gesagt…

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
வர்ஹோ தேவஸ்ஸிய தீமஹி
தியோ யோ நஹ ப்ரஸோதயாத்

நுவரேலியாவில் இருக்கும் ஸ்ரீகாயத்ரி பீட உபாசகர் சித்தர் முருகேசு சுவாமிகள் மேற்சொன்னவாறே காயத்ரி மந்திரத்தைக் கூற நான் கேட்டிருந்தேன்.